Super User / 2012 ஜனவரி 04 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே. என்.முனாஷா )
பாதுகாப்பற்ற விதத்தில் கப்ரக வாகனத்தை செலுத்தி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவர் மீது மோதி, யுவதியொருவருக்கு மரணத்தையேற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற வாகனத்தின் சாரதியை நீர்கொழும்பு பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர் .
இந்த விபத்து சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு, தம்மிட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கப்ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய இந்த விபத்துச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 23 வயதுடைய யுவதி மரணமாகியுள்ளதுடன் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிட்டிபனை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவராவார். இச்சம்பவத்தில் இறந்த யுவதியின் சடலம் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்படட்டுள்ளது.
இளைஞர் படுகாயமடைந்த நிலையில் நிலையில் இருப்பதால் வாக்குமூலம் பெற முடியாமல் இருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மாக்கந்துர பிரதேசத்தை சேர்ந்தவர்களே விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அத்துடன் யுவதியின் சடலத்தை இனங்காண்பதற்கு பொதுமக்களின் உதவியையும் பொலிஸார் நாடுகின்றனர். இச்சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .