2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பாம்பு தீண்டியதால் பெண் மரணம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

பாம்பு தீண்டியதால் 67 வயதுடைய பெண்னொருவர் செவ்வாய்க்கிழமை இரவு மரணமாகியுள்ளார்.

இச்சம்பவம் நீர்கொழும்பு, கட்டுவ பிட்டிய பிரதேசத்தில் இரவு 9.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேரி ஜெனிற்றா ரஞ்சனி என்ற இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு பாம்பு தீண்டி மரணமாகியுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற அன்று குடும்பத்துடன்; வெளியில் சென்று வீட்டுக்குள் வரும் போது, வீட்டு வாசலில் வைத்து பாம்பு தீண்டியுள்ளது.

உடனடியாக உறவினர்கள் பாம்பை அடித்து கொன்றுள்ளதுடன் பாதிக்கப்பட்டவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்

எனினும் அவர் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லும் வழியிலே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .