2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மருத்துவ சங்கத்தினால் ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கல்

Super User   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அஷ்ரப் ஏ. சமத்

அச்சு ஊடகங்களில் சுகாதரம் தொடர்பில் சிறந்த கட்டுரைகளை எழுதிய ஊடகவியலாளர்களுக்கு இன்று வியாழக்கிழமை விருதுகள் வழங்கப்பட்டன.

சுகாதார ஊடகத்துறையை முன்னேற்றுவதற்கு இலங்கை மருத்துவ சங்கத்தினால் வருடாந்தம் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

2013ஆம் ஆண்டுக்கான சிறந்த சுகாதார கட்டுரை விருது ஊடகவியலாளர்களான எப்.எம்.பைருஸ் (தமிழ்), ரண்திம ஆட்டிக்கல (ஆங்கிலம்) மற்றும் அஸந்தா எதிரிசூரிய (சிங்களம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்திய கலாநிதி பி.ஜே.பி.பெரேரா மற்றும் இலங்கை மருத்துவ சங்கத்தின் ஊடக செயலாளர் வைத்திய கலாநிதி ருவைஸ் ஹனீபாவும் இணைந்து இந்த விருதுகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .