2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு முதலுதவி பயிற்சி

Super User   / 2013 நவம்பர் 01 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.ஷாஜஹான்
       

நீர்கொழும்பு பிராந்தியத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு நேற்று வியாழக்கிழமை முதலுதவி தொடர்பான செயலமர்வொன்று இடம்பெற்றது. இந்த செயலமர்வை இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கம்பஹா மாவட்ட கிளை ஏற்பாடு செய்திருந்தது.

செஞ்சிலுவை சங்கத்தின் கம்பஹா மாவட்ட கிளையின் தலைவர் அன்டன் விக்டோரியா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சங்கத்தின் செயலாளர் குமார பெரேரா , முதலுதவி மற்றும் இளைஞர் இணைப்பாளர் துலித்த பெர்னாந்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு முதலுதவி தொடர்பாக விளக்கமளித்தனர். இதன்போது ஊடகவியலாளர்களுக்கு சிறியரக முதலுதவி பெட்டியும் வழங்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .