2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு நவீன வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 06 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.ஷாஜஹான்       


பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அதி நவீன வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றுவதற்காக  இலங்கையை வந்தடையும் வெளிநாட்டு அதிதிகளின் அவசர வைத்தியதேவைகளை நிறைவேற்றுவதற்கு வசதியாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு அதிநவீன வைத்திய உபகரணங்கள் இன்று அன்பளிப்பு செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் லலித் திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு வைத்தியசாலை அதிகாரிகளிடம் உபகரணங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன, மேல்மாகாண அமைச்சர் நிமல்லான்ஸா,  நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சனி பெர்னாந்து புள்ளே, நீர்கொழும்பு மேயர் அன்ரணி ஜயவீர, பிரதி மேயர் சகாவுல்லா, கம்பகா மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அர்சத் சில்வா, நீர்கொழும்பு வைத்தியசாலையின் பணிப்பாளர் சம்பா அளுத்வீர உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .