2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

களனி வைத்திய பீட மாணவர்கள் ஏழு பேருக்கு பிணை

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

நபர் ஒருவரை தாக்கி பணம் நகை என்பவற்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த களனி வைத்திய பீட மாணவர்கள் ஏழு பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நபர் ஒருவரை தாக்கி பணம் நகை என்பவற்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த களனி வைத்திய பீட மாணவர்கள் ஏழு பேரை  பிணையில் விடுதலை செய்யுமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.என்.எம்.பி. அமரசிங்க நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 11 சந்தேக நபர்களில் ஏழு பேரே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டனர்.

இந்த வழக்கின் முறைப்பாட்டாளர் கந்தானை, ரிலாவுள்ள, சமகிபுர மாவத்தையைச் சேர்ந்த எதிரிசிங்க ஆலாச்சிகே அசோக்க எதிரிசிங்க என்பவராவார். இவர் கட்டிடங்களை கட்டி விற்பனை செய்பவராவார்.

வழக்கின் முறைப்பாட்டாளர் கந்தானையைச் சேர்ந்த முத்துபண்டா என்பவரிடம் இரண்டு இலட்சத்து 26 ஆயிரம் ரூபா பணத்தை  ஐந்து சதவீத வட்டிக்கு பெற்று மாதாமாதம் பணத்தை செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது மகளுக்கு சுகயீனம் ஏற்படவே வட்டிப் பணத்தை சில மாதங்களாக அவர் சந்தேக நபருக்கு செலுத்ததாமல் இருந்துள்ளார்.

இதனை அடுத்து கடந்து புதன் கிழமை (27) சந்தேக நபர் 10 பேர் கொண்ட குழுவினருடன் துப்பாக்கி, கத்தி , பொல்லுகள் சகிதம் முறைப்பாட்டாளரின் வீட்டுக்கு வந்து அச்சுறுத்தியுள்ளதுடன் தாக்குதலையும் மேற்கொண்டுள்ளார்.

இதன் போது முறைப்பாhட்டாளரின் வீட்டிலிருந்த பொருட்களும் வெளியே எடுத்து வீசப்பட்டுள்ளது. இச்சம்பவத்தின் போது அங்கிருந்து 5 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள், பணம் என்பன சந்தேக நபர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இன்று வழக்கு விசாரணை இடம்பெற்ற போது களனி வைத்திய பீடத்தினால் கடிதம் ஒன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த ஏழு மாணவர்களுக்கும் செயன்முறைப் பரீட்சை இடம்பெறவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை கருத்தில் எடுத்த நீதவான் சந்தேக நபர்கள் 11 பேரில்  ஏழு மாணவர்களை தலா பத்தாயிரம் ரூப ரொக்கப் பிணையிலும் தலா இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். அத்துடன் ஏனைய நான்கு  சந்தேக நபர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இந்த வழக்கு டிசம்பர்  ஆறாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .