2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

சார்ஜா வீட்டுத் திட்டம் கையளிப்பு

Super User   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அஷ்ரப் ஏ சமத்

வெல்லம்பிட்டி, கோகிலவத்தை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட சார்ஜா வீட்டுத் திட்டம் கடந்த சனிக்கிழமை பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. 16 வீடுகளை கொண்ட இந்த வீட்டுத் திட்டத்திற்கான நிதி ஜக்கிய அரபு இராச்சியத்தின் சார்ஜா சர்வதேச அறக்கட்டளை இயக்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஜக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் அப்துல் ஹாமீட் ஏ.கே. அல் முலா, சிரேஸ்ட அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, அதாவுட செனவிரத்தின, மற்றும் சார்ஜா சர்வதேச அறக்கட்டளை இயக்கத்தின் பணிப்பாளர் தாரீக் சயீட் அல் நுஹ்மான் உட்பட பலர் இந்த வீட்டுத் திட்ட கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த வீட்டுத் திட்டத்திற்கான மூன்று ஏக்கர் காணி கோகிலவத்தையிலுள்ள இம்தியாஸ் ஹாஜியார் அன்பளிப்புச் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த வீட்டுத் திட்டத்துடன் பயனாளிகளுக்கு அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







  Comments - 0

  • ramees Wednesday, 04 December 2013 11:08 AM

    நன்றி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .