2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட செயலாளர், ஊடக செயலாளர் நியமனம்

Super User   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட அமைப்பு செயலாளர் மற்றும் மாவட்ட ஊடக செயலாளர் ஆகிய பதவிகளுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பு செயலாளராக சுப்ரமணியம் சசிகுமாரும் மாவட்ட ஊடக செயலாளராக செலம்பரம் விஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனநாயக மக்கள் முன்னணி கம்பஹா மாவட்ட செயற்குழுவினால் நீர்கொழும்பு, ஏத்துகால, போருதொட்ட, செரிலேன்ட் மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதன்போது ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனினால் இந்த நியமனம் வழங்;கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X