2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ஹோமாகம பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் தோல்வி

Kanagaraj   / 2013 டிசெம்பர் 23 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்தி கூட்டமைப்பின் ஆட்சியதிகாரத்தின் கீழிருக்கின்ற ஹோமாகம பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் இரண்டு வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளது. வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 10 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் சுனில் பெரும்புலி வாக்களிக்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திய கூட்டமைப்பின் எண்மரும் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரும் எதிராக வாக்களித்தனர்.

இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட போது இந்த சபைக்கான வரவு-செலவுத்திட்டம் தோல்வியடைந்தது. எனினும் ஒழுங்கு பிரச்சினை காரணமாக அந்த வாக்கெடுப்பு இரத்து செய்யப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .