2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

எரிபொருள் மானியம் வழங்காமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 31 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட். ஷாஜஹான்


கடந்த 08 மாதங்களாக எரிபொருள் மானியம் வழங்காமையை கண்டித்து  நீர்கொழும்பு மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீர்கொழும்பு மீனவச் சங்கங்களின் ஏற்பாட்டில் கொத்தலாவல பாலத்தின் கீழ் களப்பில்  500 இற்கும் மேற்பட்ட  சிறிய படகுகளில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 'வரவு – செலவுத்திட்ட வாக்குறுதியை காப்பாற்று', 'எரிபொருள் மானியத்தை தொடர்ந்து தா', 'பொய் வாக்குறுதிகளை வழங்கும் அமைச்சர் தேவையில்லலை', 'ஜனாதிபதியே எமது கோரிக்கைகளுக்கு செவிமடுங்கள்', 'வலைகள் வேண்டாம் எரிபொருள் வேண்டும்' என்பன போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட  அட்டைகளை இவர்கள் தாங்கியிருந்ததுடன், எதிர்ப்புக் கோஷங்களையும் எழுப்பினர்.

'08  மாதங்களாக எரிபொருள் மானியம் வழங்காமையால்   மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்களின் துன்பத்தை புரிந்துகொண்டு எரிபொருள் மானியத்தை  வழங்க ஜனாதிபதி  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர் ஒருவர் உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தால்  நீர்கொழும்பு கொட்டுவ மீன்பிடிச் சந்தை  மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X