2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

சந்தன மரங்களை வெட்டிய இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 11 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்திலுள்ள காணியொன்றி;ல் சந்தன மரங்களை வெட்டியதாகக் கூறப்படும் திம்பிரிகஸ்கட்டுவ மற்றும் ஹரிச்சந்திரபுர பிரதேசங்களைச் சேர்ந்த இருவரை செவ்வாய்க்கிழமை (11) கைதுசெய்ததாக  நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான குற்றத்தடுப்புப் பிரிவு  பொலிஸார்  தெரிவித்தனர்.

இது தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து குறித்த இடத்திற்குச் சென்று சந்தேக நபர்களை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்களை  நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X