2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

பலஸ்தீன தூதுவருக்கு பேருவளையில் பிரியாவிடை நிகழ்வு

Super User   / 2014 பெப்ரவரி 17 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையிலிருந்து பிரியவிடை பெற்றுச் செல்லும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி அன்வர் அல் அஹாவிற்கான பிரியாவிடை நிகழ்வொன்று நேற்று பேருவளையில் இடம்பெற்றது.

பேருவளையிலுள்ள யாசீர் அரபாத் பள்ளிவாசல் மற்றும் இலங்கையின் முதலாவது பள்ளிவாசலான பேருவளை மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசல் ஆகியவற்றிலேயே பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது பலஸ்தீன தூதுவருக்கான துஆப் பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் பலஸ்தீன தூதுவர் கலாநிதி அன்வர் அல் அஹா, ஈராக் தூதுவர் கஹ்தான் தாஹா கல்லாப் மற்றும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். (படங்கள்:அஹமட் ரூமி)




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X