2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

நீர்கொழும்பு நகரில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள தீர்மானம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு நகரில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களை அடுத்து நகரில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தலைமைகள், பொலிஸார், வர்த்தகர்கள், நிறுவனத் தலைவர்கள் இணைந்தே இந்த தீர்மானத்தை இன்று சனிக்கிழமை எடுத்துள்ளனர்.

நீர்கொழும்பு நகரில் உள்ள நிதி நிறுவனங்களிலும் நகைடைகளிலும் முகத்தை முழுமையாக மூடி வந்து ஆயுத முனையில்  கொள்ளையிடும் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்றுவதையடுத்து, நகரில் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

இந்த விசேட கூட்டத்திற்கு நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அதிகாரியின் அதிகாரத்திற்குட்;பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த அரச, தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த  அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்களும் பங்கேற்றனர்.

நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகேயின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ன, மேல் மாகாண அமைச்சர் நிமல் வலான்ஸா, நீர்கொழும்பு மேயர் அன்ரணி ஜயவீர, நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அதிகாத்திற்குட்;பட்ட பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொறுப்பதிகாரிகள், பிராந்திய பொலிஸ்  உதவி அத்தியட்கர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையான பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

  நீர்கொழும்பு கிரீன்ஸ் வீதியில் அமைந்துள்ள பிரபல நகை விற்பனை மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற ஒரு கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பணம் மற்றும் நகை கொள்ளைச் சம்பவத்தின் பின்னர் பாதுகாப்பு ஏற்;பாடுகள் தொடர்பான கூட்டம்  நடத்தப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில்  எடுக்கப்பட்ட தீர்;மானத்தின் அடிப்படையில் நகரின் பிரதான சுப்பர் மார்க்கட்டின் மேல் பகுதியில்  24 மணித்தியாலமும் செயற்படும் விசேட பொலிஸ் பாதுகாப்பு கண்காணிப்பு  பிரிவை அமைப்பதெனவும்,  அந்த பிரிவிற்கு நவீன வசதிகளை  செய்து கொடுப்பதெனவும், நகரின் வர்த்தக பிரதேசங்களில் சிசிடிவி கமராக்களை பொறுத்துவதெனவும், அந்த கமராக்களை  அமைக்கப்படவுள்ள விசேட பொலிஸ் பாதுகாப்பு கண்காணிப்பு  பிரிவுடன் இணைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன்,  தனியார் மற்றம் அரச நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளபடி சுய பாதுகாப்பு  நடவடிக்கைகளை தமது நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டும் எனவும்  அங்கு வலியுறுத்தப்பட்டது.

புஷ்பா நகை கடை கொள்ளைச் சம்பவ சூத்திரதாரிகள்  இன்னும் இரண்டு வாரங்களில் கைது செய்யப்படுவர் எனவும்,சந்தேக நபர்களை கைது செய்ய பொது மக்களின் உதவி தேவை எனவும் பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகே அங்கு தெரிவித்தார்






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X