2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

57ஆவது ஒழுங்கை 'சங்கம் ஒழுங்கை' என பெயர் மாற்றம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு – 06 வெள்ளவத்தையிலுள்ள 57ஆவது ஒழுங்கை 'சங்கம் ஒழுங்கை' என்று  பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி வை.கங்கைவேணியன் (வேலணை வேணியன்) தெரிவித்தார்.

இந்த ஒழுங்கையின் பெயரை மாற்றுவதற்கு  மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகிய இருவர் மட்டுமே உதவிபுரிந்ததாக தெரிவித்த கங்கைவேணியன் அவ்விருவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் 23/04/2014 இல் வெளியானதாகவும் அவர் கூறினார்.

http://static1.tamilmirror.lk/images/files/uuu.pdf


  Comments - 0

  • Pathmadeva Friday, 25 April 2014 08:07 AM

    சங்கம் என்பது பௌத்தத்தில் துறவிகளை அல்லவா குறிக்கும்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X