2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

8 மாடி கட்டிடத்திற்கு நன்கொடையாளரொருவர் நிதியுதவி

Super User   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அஷ்ரப் ஏ சமத்


கொழும்பு முஸ்லீம் மகளிர் கல்லூரியில் 8 மாடிகளை கொண்ட உயர்தர வகுப்பறைக் கட்டிடத்திற்கான நிர்மாண பணிகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த கட்டிடம் அகில இலங்கை சோனகர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் பஸ்லி நிசாரின் நன்கொடை நிதியத்தின் கீழ்  நிர்மாணிக்கப்படுகின்றது.

இந்த நிகழ்வில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, அமைச்சர்களான பந்துல குணவர்த்தன, ஜீவன் குமாரதுங்க, நன்கொடையாளர் பேராசிரியர் பஸ்லி நிசார் மற்றும் அதிபர் கலாநிதி ஹஜர்ஜான் மன்சூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது அகில இலங்கை சோனகர் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவையொட்டி ஐந்து ரூபாய் பெறுமதியான முத்திரையொன்றும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .