2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

கற்றல் உபகரணங்கள் கையளிப்பு

Princiya Dixci   / 2016 ஜூன் 04 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் ஏற்பட்ட வெள்ள இடரால் பாதிப்புற்று கல்வி கற்பதற்கான சந்தர்ப்பத்தை இழந்து நிர்க்கதியாய் நிற்கும் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ஸ்ரீ லங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் 'சோலேஸ்' (SOLACE) நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குராப்பண நிகழ்வு, மாபோல,வத்தளை அல்-அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் கல்லூரி முதல்வர் எம்.எச்.எம்.முசாதிக் தலைமையில் கடந்த வியாழக்கிழமை (02) நடைபெற்றது.

தேசிய சூரா சபையின் நிறைவேற்று உறுப்பினர் நுஹ்மான் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்நிகழ்வில் இயக்கத்தின் தலைவர் எம்.எல்.எம்.தௌபீக் கௌரவ அதிதியாக கலந்துகொண்டார்.

இயக்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி றுடானி ஷாஹிர் உட்பட மத்திய சபை உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இப்பாடசாலையில் கல்வி கற்கும் பல்லின மாணவர்களுக்கும் சுமார் 05 இலட்சம் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X