2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

பஸ் மோதியதில் நபர் பலி

Princiya Dixci   / 2015 நவம்பர் 02 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தை, டபிள்யூ சில்வா மாவத்தையில் கொழும்பிலிருந்து மத்துகம நோக்கிப் பயணித்த பஸ், பாதையை விட்டு விலகி நபரொருவர் மீது மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

ஒரு தனியார் நிறுவனத்தின் கீழ் வீதி துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மொரடுவ பிரதேசத்தைச் சேர்ந்த தல் அரம்பஹே காமினி (46) என்வரே நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். 

பாதையோரமாக குப்பை வண்டியைத் தள்ளிக்கொண்டு சென்ற வேளை குறித்த நபர் மீது, பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியமையே இவ்விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர். 

பஸ்ஸின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X