Editorial / 2025 ஏப்ரல் 09 , பி.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜகிரிய - ஸ்ரீ ஜெயவர்தனபுர இந்து வித்தியாலயத்தில் மாணவர்களின் புத்தாக்க படைப்புகளுடனான கல்வி கண்காட்சி, வியாழக்கிழமை (10) காலை 09 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளது.
மாணவர்கள், பகல் 11 மணிவரையும் பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரையும் வெளிப்பார்வையாளர்கள், பார்வையிடலாம்.
இந்த கண்காட்சியில் விசேட விதமாக மூன்று மொழிகளிலும் விளக்கங்கள் அளிக்கப்படும். மாணவர்களால் உருவாக்கப்பட்ட கல்வி தொடர்பான செயற்பாடுகள் காட்சிப்படுத்தப்படும்.
மேலும், கற்பதற்கான வாய்ப்புகள், தொழில்நுட்பத்துடனான விளக்கங்கள், மாணவர்களின் கற்பனையால் ஆக்கப்பட்ட பொருட்கள் மலிவான விலையில் கொள்வனவு செய்து கொள்ளலாம்..
தொடர்ந்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் புத்தகங்கள் விசேட விலை கழிவுடன் விற்பனைக்கு இங்கு வைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
தொடர்ந்து இந்த கண்காட்சிக்கு சீருடையில் வருகைதரும் மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாகவும் வெளி பார்வையாளர்களுக்கு நுழைவு கட்டணமாக ரூபாய் 100 அறவிடப்படும் எனவும் பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
32 minute ago
43 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
43 minute ago
50 minute ago
1 hours ago