2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வலிகாமம் கல்வி வலயத்தில் 65 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை

Kogilavani   / 2014 மார்ச் 02 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட கணிதம், தகவல் தொழில்நுட்பம், சித்திரம், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்கள் கற்பிப்பதற்கு 65 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக வலிகாமம் கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா ஞாயிற்றுக்கிழமை (02) தெரிவித்தார்.

அத்துடன், இவ் விடயம் வடமாகாண கல்வி அமைச்சின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளின் அதிபர்களினால் தெரிவிக்கப்பட்டதுடன், கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றம் காரணமாகத்தான் இத்தகைய ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் அதிபர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இது தொடர்பாக கல்விப் பணிப்பாளரைத் தொடர்புகொண்டு கேட்டபொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் தொடர்ந்து 7 வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் கடமையாற்றிய ஆசிரியர்கள் வேறு கல்வி வலயங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றனர்.

அவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பதிலாக புதிய ஆசிரியர்கள் குறித்த பாடசாலைகளுக்கு நியமிக்கப்படாமையினாலேயே இந்த ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது' என்றும் இதன்போது அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .