2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யாழில் ரூ. 22.1 மில்லியன் கொள்ளை

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 31 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா, எம்.றொசாந்த்

யாழ். மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களில் 2 கோடி 21 இலட்சத்து 34 ஆயிரத்து 334 ரூபாய் (22.1 மில்லியன் ரூபாய்) பெறுமதியான பணம், நகைகள், மற்றும் உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன வெள்ளிக்கிழமை (31) தெரிவித்தார்.

யாழ்.தலைமை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த கொள்ளையில் ஒரு கோடியே 56 இலட்சத்து 33 ஆயிரத்து 624 ரூபாய் பெறுமதியுடைய நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள அதேவேளை, 65 இலட்சத்து 710 ரூபா பெறுமதியான உடமைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இந்த கொள்ளை நடவடிக்கைகள் வீடுகள், கடைகள் மற்றும் கோவில்களில் இடம்பெற்றுள்ளன. இந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பிலான புலன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .