Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 05 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
இலங்கையின் 64 ஆவது சுதந்திரதினத்துக்காக அனுராதபுரம் மாவட்டத்துக்கு வருகை தந்த வெளிநாட்டு இராஜதந்திரிகளில் சுமார் 100 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர் என வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.இலங்கோவன் தெரிவித்தார்.
யாழ்.நூலகத்திற்கு வருகை தந்த வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு வடமாகாண ஆளுநர் அலுவலகத்தினால் விசேட வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்போது, வடமாகாணத்தின் அபிவிருத்திக் கட்டமைப்புக்கள் தொடர்பாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறிக்கும் இக்குழுவினருக்குமிடையிலான கலந்துரையாடலொன்று யாழ்.பொதுநூலகத்தில் இடம்பெற்றது.
இங்கு உரையாற்றிய வடாமகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி,
"வடக்கின் வசந்தம்' அபிவிருத்தியில் வட மாகாணம் துரிதகதியில் அபிவிருத்தியடைந்து வருகிறது.
கடந்த 30 வருடகாலத்திற்குப் பின்பு நீங்கள் யாழ்.மண்ணில் கால்வைக்கக் கூடிய வசதியை ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார். வடமாகாணம் என்றுமில்லாதவாறு அபிவிருத்தியை நோக்கிய பாதையில் சென்றுகொண்டு இருகிறது.
மக்களின் அமைதியான வாழ்வுக்கு அபிவிருத்தி முக்கிய பங்கு வகிக்கிறது" என குறிப்பிட்டார்.
இதேவேளை, மேற்படி குழுவினர் யாழ்.மாவட்டத்தில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட இடங்களை நேரடியாகச் சென்று பார்வையிடவுள்ளனர்.
இச்சந்திப்பின்போது, யாழ்.மாநாகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.இளங்கோ, வடாமாகாண ஆளுநர் அலுவலக செயலாளர் திருமதி விஜயலச்சுமி ரமேஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்
kundaanthady Sunday, 05 February 2012 10:39 PM
வாங்கோ இப்போது மாம்பழ சீசன் தானே ........அப்பிடியே நல்ல கடலுணவு , பிரெஷ் மரக்கறி எல்லாம் சாப்பிட்டு போங்கோ .....மக்கள் எக்கேடு கேட்டால் யாருக்கென்ன ?
Reply : 0 0
ummpa Tuesday, 07 February 2012 02:37 PM
அறிவுள்ளவர்கள் என்றால் புரிந்து இருக்கும். ஏன் வடாமகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி இருக்க வேண்டும். இதுவே போதும் என்ன நடக்குது என்பதை புரிந்துகொள்ள . உங்கள் பணமா பயணத்துக்கு. எல்லாம் அவர் அவர் நாட்டின் பொது மக்களின் பணம் தான். ஆம் குண்டாந்தடி சொன்னது சரியாக இருக்கும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
8 hours ago
16 May 2025