2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

யாழில் 1,128 ஹெக்ரெயர் நிலப்பரப்பில் திராட்சை செய்கை

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 23 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.கே.பிரசாத்


இந்த வருடம் யாழ். மாவட்டத்தில் 1,128 ஹெக்ரெயர் நிலப்பரப்பில்  திராட்சை செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக  யாழ். மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் கிருஸ்ணன் சிறிபாலசுந்தரம் தெரிவித்துள்ளார்.

1960ஆம் ஆண்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட  திராட்சை உற்பத்தியில், இலங்கையில் முதலிடம் பெற்ற மாவட்டமாக யாழ். மாவட்டம் திகழ்ந்துள்ளது.

யுத்தம் காரணமாக திராட்சை செய்கை யாழ். மாவட்டத்தில்  22 ஹெக்ரெயராக வீழ்ச்சியடைந்திருந்ததாகவும் அவர் கூறினார்.
22 ஹெக்ரெயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த  திராட்சை செய்கை பின்னர் படிப்படியாக வளர்ச்சியடைந்து 2012ஆம் ஆண்டு 102 ஹெக்ரெயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

மேலும், யுத்தம் முடிந்து  கடந்த 4 வருடங்களில் 300 ஹெக்ரெயர் நிலப்பரப்பில் திராட்சை  செய்கை மேற்கொள்ளப்பட்டுவந்தது. 
இந்த வருடம் 1,128 ஹெக்ரெயர் நிலப்பரப்பில் திராட்சை செய்கை மேற்கொள்ளப்பட்டு   வருவதாகவும் அவர் கூறினார்.

யாழ். மாவட்டத்தில் புத்தூர், கோப்பாய், கைதடி, இளவாலை, சண்டிலிப்பாய் ஆகிய பிரதேசங்களில் திராட்சை செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  தீவுப்பகுதியில் மண்கும்பான் பிரதேசத்தில் மட்டும் 1,000 ஹெக்ரெயர் நிலப்பரப்பில் திராட்சை செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இதேவேளை,  திராட்சை செய்கையை மேம்படுத்துவதற்காக 175 விவசாயிகளுக்கு திராட்சைக் கொடிகள் மற்றும் உபகரணங்களும் கடந்த காலத்தில்  வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .