2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

யாழில் 265 பேர் காசநோயால் பாதிப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 07 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ்ப்பாணத்தில் காசநோயால் 265 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக காசநோய் வைத்திய அதிகாரியொருவர் இன்று தெரிவித்தார்.

இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் இன்றுவரையில் 265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14 வயதுக்குட்பட்ட 11 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சூழல் முகாமைத்துவத்தின் மூலம் காசநோய் தொற்றைக் கட்டுப்படுத்தமுடியும். அத்துடன், வைத்திய சேவை வழங்கும் இடங்கள், மக்கள் நெருக்கமாக வாழும் இடங்கள், வேலை செய்யும் இடங்கள், பிரயாணிக்கும் வாகனங்கள் என்பவற்றில் காற்றோட்டம் தொடர்பாக கவனம் செலுத்தபட வேண்டும். வெப்பமான சூழலில் வேலை செய்பவர்களுக்கு இலகுவில் காசநோய் தாக்கம் ஏற்படும். இவர்கள் வேலைச்சூழலை உகந்ததாக மாற்றி பேணுவதனூடாக காசநோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும். மக்களுக்கு காசநோய் தொற்று தொடர்பாக விழிப்புணர்வு அவசியம். சளியுடன் இருமல் ஏற்பட்டால் வைத்தியசாலையில் தகுந்த சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் அவ்வைத்திய அதிகாரி அறிவுறுத்தினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X