2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

குருநகரில் 35 கிலோ வெடிபொருள் மீட்பு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 30 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ். குருநகர், இறங்குதுறைப் பகுதியில் 35 கிலோகிராம் நிறையுடைய சி.என்.பி ரக வெடிமருந்து மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். புலனாய்வுத்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி மேற்படி வெடி மருந்து மீட்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கானில் அடைக்கப்பட்ட நிலையில் சுமார் 35 கிலோ நிறையுடைய வெடி மருந்து கடல் மார்க்கமாக கொண்டு செல்ல தயாரான நிலையில், குருநகர் இறங்குதுறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என பொலிஸார் தெரிவித்தனர்.
 
இது தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்த யாழ். பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X