2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கொக்குவில் வாள்வெட்டுத் தொடர்பில் 5 பேர் சந்தேகத்தில் கைது

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 03 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

யாழ். கொக்குவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன்  தொடர்புடையதாகக் கருதப்படும் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் இன்று திங்கட்கிழமை தெரிவித்தனர்.

கொக்குவிலில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரு குழுக்களுக்கு இடையில் வாள்வெட்டு இடம்பெற்றது.

இதன்போது படுகாயமடைந்த 3 பேர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X