2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யாழில் 80 ஹெக்டேயரில் உருளைக்கிழங்கு செய்கை

Menaka Mookandi   / 2014 நவம்பர் 09 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

யாழ். மாவட்டத்தில் இவ்வருடம் 80 ஹெக்டேயர் நிலப்பரப்பில் உருளைக்கிழங்கு பயிற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் ஞாயிற்றுக்கிழமை (09) தெரிவித்தார்.

இந்த செய்கைக்கு தேவையான 1000 அந்தர் (1 அந்தர் - 50 கிலோ) உருளைக்கிழங்கு விதைகள் சனிக்கிழமை (08) விவசாய பணிமனைக்கு வந்தடைந்துள்ளன.

உருளைக்கிழங்கு செய்கை மேற்கொள்வதற்காக பதிவு செய்த விவசாயிகளுக்கு அவர்களின் செய்கைக்கு ஏற்ற அளவு விதை கிழங்குகள் வழங்கப்படவுள்ளன.

விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, இம்மாதம் இறுதிக்குள் உருளைக்கிழங்கு செய்கைகள் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .