Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஸன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து, இலங்கை அரசாங்கம் விடுபட்டுச் செல்ல இடமளிக்கப் போவதில்லை என சர்வதேச மன்னிப்புச் சபையினர் தன்னிடம் தெரிவித்துள்ளதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு மூன்று நாள் விஐயம் மேற்கொண்டிருந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் தலைமையிலான குழுவினர், யாழ். நகரிலுள்ள வடக்கு மாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, இன்று (05) சந்தித்துக் கலந்துரையாடினார்.
இச்சந்திப்புக் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண முதலமைச்சர்,
"இதில் முக்கியமாக அரசாங்கம் சரியோ, பிழையோ, காலம் எடுத்ததோ, எடுக்கவில்லையோ சில குற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன, சில விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவிருக்கின்றன. ஆகவே அதை நாங்கள் செய்வோம் என்று, தங்கள் இணக்கப்பாட்டை இலங்கை அரசாங்கத்தினர் ஐக்கிய நாடுகளுக்கு அறிவித்திருக்கின்றனர்.
ஆனால் இதுவரை காலமும் என்ன செய்தனர் என்றால், முழுமையாக எதுவுமே செய்யவில்லை. ஆகவே இனியும் செய்ய வேண்டிய கடப்பாடு, அரசாங்கத்துக்கு இருக்கிறது. ஆகவே அதிலிருந்து அவர்கள் விடுபட முடியாது என்பது தான், சர்வதேச மன்னிப்புச் சபையின் நிலைப்பாடாக இருக்கிறது" ஏன்றார்.
1 hours ago
3 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
15 Aug 2025