2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

'ஒழுங்குகளை உதாசீனம் செய்கின்றனர்'

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 05 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஸன்

யாழ்ப்பாணத்தில் வாகனம் செலுத்தும் 90 சதவீதமானவர்கள், வீதி ஒழுங்குகளை உதாசீனம் செய்கின்றார்கள் என்று, யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கனிஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் குற்றம் சுமத்தினார்.

யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டம், யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு குற்றஞ்சுமத்தியதுடன், இதனால் அதிகரிக்கும் வீதி விபத்துகளால் பரிதாப உயிரிழப்புகளும் ஏற்படுவதாக சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அதனைக் குறைப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை, பொலிஸார் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தனர்.

இவ்வாறானவர்களுக்கு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .