2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

'சர்வதேச மன்னிப்புச் சபை தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும்'

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 05 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஸன்

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத நிலைமைகள் தொடர்கின்றமையால், அத்தகைய பிரச்சினைகயைத் தீர்ப்பதற்கு சர்வதேச மன்னிப்புச் சபை தொடர்ந்தும், இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, தன்னைச் சந்தித்த சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகளிடம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு மூன்று நாள் விஐயம் மேற்கொண்டிருந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் தலைமையிலான குழுவினர், யாழ். நகரிலுள்ள வடக்கு மாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, இன்று (05​) சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலையே, முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"வடக்கு மாகாணத்தில் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், காணாமற்போனோர் பதில் கூற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தொடர்ச்சியான போராட்டங்களை பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற மக்களது வீடுகளுக்குச் சென்று சந்தித்து, மேற்படி குழுவினர் பேசியிருக்கின்றார். இதற்கமைய பல விடயங்களையும் அறிந்து வைத்து தான் எங்களுடன் மேலதிக விடயங்கள் தொடர்பில் பேசினார்கள்.

எங்களுடய பிரச்சினைகளை அரசாங்கத்துக்கு முடியுமான வகையில் பல தடவைகள் தெரிவித்துக் கொண்டு தான் வந்திருக்கிறோம். ஆனாலும், இதற்கான தீர்வுகள் என்பது எட்டப்படாமலேயே இருக்கின்றன.

இந்நிலையில், வெளிநாட்டு அரசாங்கங்களும் இவர்களைப் போன்ற அதாவது சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற நிறுவனங்களும், அரசாங்கத்துக்கு நெருக்குதல்களைக் கொடுத்தால் தான் எதையுமே செய்ய முடியும். அந்த அடிப்படையில் தான் நீங்கள் தொடர்ந்து இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதல்களைக்கொடுக்க வேண்டுமென்று கூறியிருந்தேன்" என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .