2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

'நோயாளர்களை பார்க்க கர்ப்பிணி, குழந்தைகள் வரவேண்டாம்'

George   / 2017 மார்ச் 06 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

“தற்போது பரவலாக ஏற்பட்டுள்ள தொற்று நோய்கள் காரணமாக, யாழ். போதனா வைத்தியசாலைக்கு நோயாளர்களை பார்வையிட கர்ப்பிணிகள், குழந்தைகள் வருகைதர வேண்டாம்” என, யாழ். வைத்தியசாலை பணிப்பாளர் என்.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

“கடந்த சில வாரங்களாக  நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை மாற்றங்களால், தொற்றுநோய்களின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதில் டெங்கு, சளிசுரம் (இன்புளூவென்சா வகைக் காய்ச்சல்) மற்றும் பல்வேறு சுவாசத் தொற்று நோய்களின் தாக்கம் அடங்குகின்றன.

எனவே பொதுமக்கள், வைத்தியசாலை விடுதியில் உள்ள நோயாளரைப் பார்வையிடுவதற்கு  வருவதை கூடுமானளவு தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்” என, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X