Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2021 டிசெம்பர் 18 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு கிராமத்தினை சேர்ந்த 13 வயதுச் சிறுமி கடந்த 15ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 15 முதல் காணவில்லை என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுமி இன்று மூங்கிலாறு 200 வீட்டுத்திட்டம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி வருகைதந்து பார்வையிட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
உயிரிழந்த சிறுமி தொடர்பில் மேலும் தெரியவருகையில்
13 வயதுடைய குறித்த சிறுமி மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டில் வசிக்கின்றார் இந்த சிறுமி திருகோணமலையில் விடுதியில் தங்கி நின்று படிப்பதாகவும் காணாமல் போவதற்கு இரண்டு நாட்களுக்க முன்னர்தான் வீட்டிற்கு வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago