Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஜூலை 14 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சில பிரமுகர்கள் தம்மை மட்டும் நேசி என்று கேட்காது தாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளையும் நேசி என்கின்றார்கள். நம் மக்கள் இதுவரைகாலமும் அனுபவித்ததிலும் பார்க்க இன்று படும் துன்பம் மிகப் பெரிதாகும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்படுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நம் நாடு ஓரு சுண்டக்காய் நாடு. அதில் ஒரு சிறு பகுதியே வட மாகாணமாகும். வுட மாகாணத்தின் ஒரு சிறு பகுதியிலேயே உள்ளூராட்சி தேர்த்தல் நடைபெற உள்ளது. மக்களை இஷ்டம் போல் செயற்படவிடாது, நாம் எல்லோரும் ஆதிவாசிகள் என்ற நினைப்பிலேயே அரசும், அரசின் கையாட்களும் செயற்படுவது வேடிக்கையானதும் வேதனையை தரும் விடயமாகும்.
வடக்கே வசந்தம் வீசவில்லை. மாறாக அமைதிப்புயல் வீசுகின்றது என்று ஐனாதிபதிக்கே நான் பலதடவை கூறியுள்ளேன். உண்மையும் அதுவே. நடந்து முடிந்தது போர் அல்ல. போர் என்பது இரு நாடுகளுக்கு இடையில் நடப்பது. இது உள்ளுர் கிளர்ச்சியை அடக்க அரசு அதனை போராகப் பயன்படுத்தியது.
நோக்கம் நிறைவேறிவிட்டது. அரசு கண்ணியமான முறையில் தனது படைகளை வெளியேற்றியிருக்க வேண்டும். அதைவிடுத்து தொடர்ந்து இராணுவத்தை வடக்கு கிழக்குப் பகுதிகளிலேயே நிலைகொள்ள வைத்து மக்களின் அடிப்படை சுதந்திரத்தை அனுபவிக்க இடமளிக்காது மூலை முடுக்கெல்லாம் தற்காலிகமாக நிலைகொண்டிருந்த இராணுவத்தை நிரந்தரமாக நிலை கொள்ள வைத்து மக்களுக்கு நிரந்தர பயத்தையும், பீதியையும் ஏற்பபடுத்த எண்ணுவது அப்பாவி மக்களுக்கு அரசும், அரசுடன் இணைந்து செயற்படும் எம்மவரில் சிலரும் செய்யும் பெருந்துரோகமாகும். யுத்தம் முடிந்து இரண்டான்டுகள் கடந்தும் இன்னும் மக்கள் தமது வீடுகளில் நிம்மதியாக வாழ முடியவில்லை.
அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்தப்படவில்லை. இன்னும் மூன்று நேர உணவும் உண்ண வழியில்லாமல் பலபேர் பசியுடன் வாழ்கின்றார்கள். தமது உடைமைகளை முற்றும் இழந்த நிலையிலே, அரசு கொடுத்துவந்த நிவாரணங்களும் நிறுத்தப்பட்டு அனேகர் பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளார்கள். தினமும் நாலு திறப்பவிழா, நாலு அமைச்சர்களின் பவனி என்று மக்களை இங்கும் அங்கும் அலைத்து பஸ் வண்டிகளில் ஏற்றிச் சென்று புரியாணி சாப்பிட வைத்து அனுப்பப்படும் அப்பவிகள், இரானுவத்தின் கட்டளைகளுக்குப் பயந்து தமது உழைக்கும் வாய்ப்பை இழந்து அலைக்களிக்கப்படுகின்றார்கள்.
நடக்க இருக்கும் தேர்தல் வெறும் உள்ளுராட்சி தேர்தல். இதற்கு ஐனாதிபதியோ, அமைச்சர்களோ படையெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வயல் விதைப்பது, விதை நெல்லு இதுதான் என காட்டுவது, இப்படித்தான் உழுவது என்பதெல்லாம் நம் மக்களுக்கு கற்றுதர வேண்டியளவிற்கு நாம் ஆதிவாசிகள் அல்ல. உண்மையாக ஐனாதிபதி நம் மக்களுக்கு நன்மை செய்ய விரும்பினால் தனது அமைச்சர் பட்டாளத்தை உடனடியாக திரும்ப அழைத்து, திறப்பு விழாக்கள், அடிக்கல் நாட்டுதல் போன்ற வைபவங்களை நிறுத்தச் சொல்லி அதற்குச் செலவாகும் பெரும் தொகையை வறுமையாலும் பசியாலும் வாடும் நாடு மழுவதிலும் பரவியுள்ள சிங்கள, தமிழ், இஸ்லாமிய மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்குச் செலவிடுவதே நியாயமானதும், பொருத்தமானதுமாகும். இது அரச தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டிய விடயமகும்.
சுண்டைக்காய் அளவான எமது நாட்டுக்கு எவரும் சதி செய்யவுமில்லை. அதன் முன்னேற்றத்தை தடுக்கவுமில்லை. அதற்கு மாறாக அத்தனை நாடுகளும் வாரி வாரி வழங்குகின்றன. நாம் சரியாக நடந்தால் எவரின் சதிபற்றியும் நாம் கவலைப்படத் தேவையில்லை.
தேர்தலிற்கான பணிகளை பொலிசாரிடம் ஒப்படைத்து விட்டு தேர்தல் முடியும் வரை இராணுவம் தேர்தல் சம்பந்தமான தலையீடுகளை மேற்கொள்ள வேண்டியதில்லையென படையினருக்கு கடுமையக எச்சரிக்க வேண்டும். விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் பலர் இன்று அமைச்சர்களின் இணைப்பாளர்களாகவும், அளும் கட்சியின் வேட்பாளர்களாகவும் உள்ளனர்.
இவர்களில் சிலர் கடந்த கால குற்றச் செயல்களிற்காக சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவதுடன் அவர்கள் சேர்த்து வைத்துள்ள சொத்துகள் சம்பந்தமாக விசாரணைக்கு உட்படுத்தப்;பட வேண்டும். எனவே மக்கள் தான் அரசு தரப்பை பார்த்து பயப்பட வேண்டுமே தவிர, அரசாங்கம் பயப்படத் தேவையில்லை. அரசிடம் படையினரும், முன்னாள் புலி உறுப்பினர்களுமே உள்ளனர்.
தேர்தல் சம்பந்தமான சகல விடயங்களும், வாக்காளர் மற்றும் அதிகாரிகள் ஆகியோரின் பாதுகாப்பு உட்பட அனைத்து நடவடிக்கைகளும் அவசியமேற்படின் பிற மாநிலங்களிலிருந்து மேலதிக பொலிஸாரை வரவழைத்து பொலிஸ் அதிகாரிகளின் பொறுப்பில் கையளித்து இராணுவம் முற்று முழுதாக முடக்கிவைக்கப்பட வேண்டும்.
வீ. ஆனந்தசங்கரி
தலைவர்
தமிழர் விடுதலைக் கூட்டணி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago