Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 06 , மு.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார வைத்திய அலுவலகம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மீண்டும் முன்னெடுக்குமாறு கால்நடை வளர்ப்போர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார வைத்திய அலுவலகம் அமைப்பதற்காக அனைவரதும் அனுமதி பெறப்பட்டு ஆரம்பக்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார வைத்திய அலுவலகம் நிர்மாணிப்பதற்காக குறித்த செயலகத்திற்கு அண்மித்த பகுதியான பண்டத்தரிப்பு நகர்ப் புறத்தில் அப்பகுதியைச் ஒருவரால் காணி நன்கொடையாக வழங்கப்பட்டது. இதற்கு வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள மாகாணப் பணிப்பாளரினால் அனுமதி கிடைக்கப்பெற்றது.
அக்காணியில் கட்டடம் அமைப்பதற்கான நில அளவீட்டு வரைபடம் வரையப்பட்டு அத்திபாரம் வெட்டுதல், கிணறு வெட்டுதல், மண், கல், கொங்கிறீட் கற்கள் இறக்குமதி செய்யப்பட்டு அங்கிருந்த பனை மரங்களும் உரிய அனுமதியுடன் வெட்டப்பட்டு ஆரம்பக்கட்ட வேலைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இத்திட்டம் கடந்த ஒரு வாரகாலமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இடைநிறுத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரிய வராதுள்ள நிலையில், இந்த நிலையத்தை நவாலிப் பகுதியில் அமைப்பதற்கு ஏற்கெனவே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அக்காணிக்கான பாதை இல்லாதிருப்பதனால் அப்பகுதி தெரிவு செய்யப்படவில்லை.
அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக கடற்றொழில் காணப்படுகின்றது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார வைத்திய அலுவலகம் அமைப்பதற்கான நடவடிக்கையில் முன்னெடுக்கப்பட்ட பகுதியில் இந்த நிலையம் அமையுமாயின் பண்டத்தரிப்பு, மாதகல், சில்லாலை, மானிப்பாய் மேற்கு, பெரியவிளான், மாரீசன்கூடல், வடலியடைப்பு, இளவாலை, மாகியம்பிட்டி, சண்டிலிப்பாய் வடக்கு மற்றும் மத்தி ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கி காணப்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
51 minute ago
1 hours ago