2025 மே 19, திங்கட்கிழமை

ஜெய்பூர் செயற்கை கால் பொருத்தும் முகாம்

Super User   / 2011 செப்டெம்பர் 06 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார)

யாழ்பாணத்திற்கான இந்திய கொன்சூலேர் ஜெனரல் ஒழுங்கு செய்த ஜெய்ப்பூர் செயற்கை கால் பொருத்தும் முகாமை வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி மற்றும் யாழ்பாணத்திற்கான இந்திய கொன்சூலேர் ஜெனரல் வி.மாகாலிங்கம் ஆகியோர் கோண்டாவில் பிரதேச வைத்தியசாலையில் நேற்று திங்கட்கிழமை திறந்துவைத்தனர்.

இந்த முகாம் செப்டம்பர் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. வலுவிழந்தோருக்கு சேவை செய்யும் அதி பெரிய நிறுவனமான பகவான் மகா வீரர் சஹயட சமித்தி எனப்படும் தொண்டு நிறுவனம் இதை நடத்துகின்றது.

உலக புகழ்பெற்ற வார இதழான 'ரைம்' ஜெய்ப்பூர் காலை 2009ஆம் ஆண்டிற்கான அதி சிறந்த கண்டுபிடிப்பு என பாராட்டியது. கடந்த 35 வருடங்களாக செயற்பட்டு வரும் இந்த நிறுவனம் இதுவரை 1.2 மில்லியன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியுள்ளது.

இதுபோன்ற முகாமை இந்த நிறுவனத்தின் உதவியுடன் இந்திய அரசாங்கம் 2010இல் வவுனியா, மெனிக்பாம் அகதி முகாமில் நடத்தியது. அதன்போது 1,400 பயனாளிகளுக்கு செயற்கை கால்கள், கைகள், ஊன்று கோல்கள் வழங்கப்பட்டன.

இந்த முகாமில் சிகிச்சை பெறுவதற்காக 500 பேர் வரை பதிவுசெய்துள்ளனர். இங்கு வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் இலவசமானவையாகும்.

தமது பெயர்களை பதியாதவர்கள் பின்வரும் அலுவலகங்களுடன் தொடர்புகொண்டால் ஆவனம் செய்யப்படும்.

1.    சுகாதார சேவைகளுக்கான பிராந்திய பணிப்பாளர் இல.572/3 வைத்தியசாலை வீதி யாழ்ப்பாணம்.

2.    சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சு இல.55 மாட்டின் வீதி யாழ்பாணம்.

3.    ஜெய்ப்பூர் கால் முகாம்  பிரதேச வைத்தியசாலை கோண்டாவில்.

பதிவு செய்ய முடியாதவர்கள் நேரிலே கோண்டாவிலில் நடைபெறும் முகாமிற்கு காலையில் சென்றால் சிகிச்சை ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X