2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 07 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கப் பணியாளர்கள் இண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக வளாகத்தில் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பள முரண்பாட்டை உடனடியாக நீக்க வேண்டும், பல்கலைக்கழகத்தின் சுயாதீயத்தை பேண வேண்டும் ஆகிய இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்தே யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'சம்பள முரண்பாட்டை உடனடியாக தீர்', 'எங்களது வயிற்றில் அடிக்க வேண்டாம்', 'பல்கலைக்கழக கல்வியின் சுயாதீயத்தை உறுதிப்படுத்து' போன்ற கோஷங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.  

முரண்பாட்டு பூதத்திற்கு எதிராக ஆக்ரோஷமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X