2025 மே 19, திங்கட்கிழமை

யாழில் இனந்தெரியாத நபர்களுக்கு எதிரான உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 09 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் இனந்தெரியாத நபர்களின் நடமாட்டத்திற்கு எதிராக நாளை சனிக்கிழமை தமிழ்க் கட்சிகளினாலும் சமூகப் பொதுவமைப்புக்களினாலும் மக்களினாலும் மேற்கொள்ளப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தாங்கள் கைவிடுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைச்செயலாளர் சி.வி.கே.சிவஞானம்  தெரிவித்துள்ளார்.

நாவாந்துறை மக்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொள்வது குறித்து ஜனாதிபதி தலைமையில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக  எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X