2025 மே 19, திங்கட்கிழமை

யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பில் நான்கு பேருக்கு கௌரவ கலாநிதி பட்டங்கள்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 10 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ்.பல் கலைக்கழகப் பொதுபட்டமளிப்பு விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது, நான்கு பேருக்கு கௌரவ கலாநிதிப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளதாக யாழ்.பல்காலைக்கழக பதிவாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மூதவையின் சிபார்சின் பேரில் யாழ். பல்கலைக்கழக பேரவை குறித்த நால்வருக்கும் கௌரவ கலாநிதிப் பட்டங்களை வழங்க அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்தப் பட்டமளிப்பு விழாவில்  வாழ்நாள் பேராசிரியர் திருமதி ஆர்.மகேஸ்வரன், வாழ்நாள் பேராசிரியர் எஸ்.கே.சிற்றம்பலம், வைத்திய கலாநிதி எஸ். ஆனந்தராஜா, ஆறுதிருமுருகன் ஆகிய நால்வருக்குமே கௌரவ கலாநிதிப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

யாழ். பல்கலைக்கழகத்தில் நீண்டகாலம் மகத்தானசேவை ஆற்றியமைக்காக வாழ்நாள் பேராசிரியர் திருமதி ஆர். மகேஸ்வரனுக்கு விஞ்ஞான கலாநிதி பட்டமும் வாழ்நாள் பேராசிரியர் எஸ்.கே. சிற்றம்பலத்துக்கு இலக்கிய கலாநிதிப் பட்டமும் யாழ். போதனா வைத்திய சாலையில் யுத்த சூழ்நிலையில் இடர்பாடுகளுக்கு மத்தியில் சிறந்த மருத்துவ சேவை வழங்கியமைக்காக வைத்திய கலாநிதி எஸ்.ஆனந்தராஜாவுக்கு கௌரவ கலாநிதிப் பட்டமும் சமூக சமயப் பணிகளில் ஈடுபட்டு வரும் செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகனுக்கு கௌரவ கலாநிதிப்பட்டமும் வழங்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X