Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 11 , மு.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
ஏ - 9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியானார். இந்த விபத்துச் சம்பவம் பளைப் பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.
ஒரு பிள்ளையின் தந்தையான திருநாவுக்கரசு பிரபாகர் (வயது 25) என்பவரே இந்த விபத்தில் பலியானவர் ஆவார்.
வவுனியாவில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வரும் மேற்படி நபர், யாழ். பண்டத்தரிப்பிலுள்ள முருகமூர்த்தி கோவிலின் வருடாந்தத் தேர்த் திருவிழாவுக்குச் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது வாகனமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானார்.
பலியானவரின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வாகனத்தில் வந்தவர் பளைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
16 minute ago
47 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
47 minute ago
52 minute ago
1 hours ago