Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 11 , மு.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
யாழ்ப்பாணம், புத்தூர்ப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் நேற்று சனிக்கிழமை உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மீசாலை வீதிப்பகுதியில் புத்தூர் சந்தியிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரத்திலுள்ள விதவாணி பகுதியிலேயே இச்சடலம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசிய நிலையில் வீதியால் பயணித்த சிலர் அங்கு சென்று பார்வையிட்டபோதே சடலத்தைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதனைத் தொடர்ந்து குறித்த சடலத்தை மீட்ட அச்சுவேலிப் பொலிஸார், யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். இந்த நிலையிலேயே குறித்த சடலம் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டது.
நாவலப்பிட்டியைச் சொந்த இடமாகவும் ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் தற்போது வதிவிடமாகவும் கொண்ட இரு பிள்ளைகளின் தந்தையான கெட்டியாராச்சி சுரேஸ்குமார் என்பவரது சடலமென உறவினர்கள் அடையாளம் காட்டினர்.
மேற்படி நபர் கடந்த இரண்டாம் திகதி கிளிநொச்சி செல்வதாக கூறிச் சென்றவரெனவும் பின்னர் இவரிடமிருந்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லையெனவும் உறவினர்கள் தெரிவித்தனர். இது குறித்து சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்றபோது பொலிஸார் முறைப்பாட்டை எடுக்கவில்லையெனவும் உறவினர்கள் குறிப்பிட்டனர்.
குறித்த சடலம் தொடர்பான தகவல் ஊடகங்களில் வெளியானதையடுத்து தமது உறவினருடைய சடலமென உறவினர்கள் வைத்தியசாலையில் அடையாளம் காட்டினர்.
குறித்த நபர் கடந்த 7 வருடங்களாக ஏழாலை மயிலங்காட்டில் திருமணம் முடித்து வாழ்ந்து வருபவரெனவும் இவர் கூலி வேலை செய்பவரெனவும் தெரிவிக்கப்படுகிறது.
சடலத்தை பார்வையிட்ட மல்லாகம் நீதவான் உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
16 minute ago
47 minute ago
52 minute ago
1 hours ago
suthakaran thankarasa Sunday, 11 September 2011 04:28 PM
இப்படி தானே தமிழனின் வாழ்வு போகுது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
47 minute ago
52 minute ago
1 hours ago