Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 10 , மு.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். ஊர்காவற்றுறையிலிருந்து அனலைதீவு நோக்கிச் சென்றுகொண்டிருந்த பயணிகள் படகொன்று நடுக்கடலில் மூழ்கியபோதிலும், அப்படகில் பயணித்த 36 பொதுமக்களும் கடற்படையினரின் உதவியால் தெய்வாதீனமாக உயிர்தப்பினர். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.
'லோ லட்சுமி 2' என்ற படகே நடுக்கடலில் மூழ்கியது. கடற்படையினரின் உதவி வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக அனலைதீவுக்கு குறித்த படகு சென்றுகொண்டிருந்தபோதே பாறையொன்றில் மோதி மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
கடலில் பொதுமக்கள் தத்தளித்துக்கொண்டிருப்பதை அவதானித்த கடற்படையினர், அதிவேகப் படகுகளில் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களை காப்பாற்றினர்.
பொதுமக்களை கரைக்கு மீட்டு வந்து அவர்களுக்கு முதலுதவி வழங்கிய கடற்படையினர், குறித்த சம்பவம் தொடர்பில் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் வீடுகளுக்கு பொதுமக்களை அனுப்பிவைத்தனர்.
Alga Monday, 10 October 2011 03:46 PM
Thumps up! good job cobs!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago