2025 மே 17, சனிக்கிழமை

'வடமாகாணத்தில் அபிவிருத்தியென்ற பெயரில் வெளிப்பூச்சு மாத்திரமே'

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 06 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடமாகாணத்தின் எதிர்கால அபிவிருத்தியை அரசாங்கம் மந்தகதியில் கொண்டுசெல்வதுடன், அபிவிருத்தியென்ற பெயரில் வெளிப்பூச்சு மாத்திரமேயென சமாதனத்திற்கும் நல்லெண்ணத்திற்குமான மக்கள் குழு தெரிவித்துள்ளது

யாழ். ஆயர் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அக்குழுவின் பிரதிநிதிகள் இவ்வாறு கூறியுள்ளனர். அவர்  மேலும் தெரிவிக்கையில்,

'வடபகுதியில் கல்வி, சுகாதாரம், மீள்குடியேற்றம், வீதி அபிவிருத்தியென தொடர்ந்து கொண்டு செல்லும் அபிவிருத்திகள் மக்களின் வாழ்வியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக பாரிய சமூகப் பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது.

வடபகுதி கல்வி நிலையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டாலும் சுகாதாரப் பிரச்சினைகளில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. யாழ்ப்பாணத்திலுள்ள சாதாரண  குடிமக்களுக்கு மின்சார வசதிகள் கிடைக்கவில்லை.   மீள்குடியேற்றப் பகுதிகளில் போக்குவரத்து செய்வதற்குக்கூட சிறந்த வீதிகள் இல்லாத நிலையில் யாழ்ப்பாணத்தில் இன்றைய அபிவிருத்தி காணப்படுகிறது.

அரசாங்கம் மீளக்குடியேறிய மக்களின் தேவைகளை முதலில் நிரல்படுத்தி அவர்களின் வாழ்வியலில் முன்னேற்றத்தைச் செய்ய வேண்டும். புதிய வாழ்விடங்களுக்கு மக்கள் செல்கின்றபோது அவர்களின் கல்வி, சுகாதாரம் தொடர்பாக அரசு கூடிய அக்கறை எடுக்க வேண்டும்'  என்றனர்.

இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் சமாதனத்திற்கும் நல்லெண்ணத்திற்குமான மக்கள் குழுவின் பிரதிநிதிகளான பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, எஸ்.பரமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .