2025 மே 17, சனிக்கிழமை

அரசு - கூட்டமைப்பு பேச்சில் மூன்றாம் தரப்பாக இந்தியா செயற்பட வேண்டும்: யாழ். ஆயர்

Super User   / 2012 ஜனவரி 18 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தாஸ்)

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தராக இந்தியா செயற்பட வேண்டும் என யாழ் ஆயர் வண. தோமஸ் சவுந்தரநாயம் ஆண்டகை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தின் உதவிகளை கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை யாழ்பாணத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் கலந்துகொண்டார்.

இதன்போதே யாழ் ஆயர் வண. தோமஸ் சவுந்தரநாயம் இந்த வேண்டுகோள் அடங்கிய மகஜரொன்றை இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கையளித்தார்.

இந்த மகஜரின் பிரதியொன்று கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசானது தமிழ் சிறுபான்மையினருக்கு பொருத்தமான அரசியல் தீர்வொன்றை அடைவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.

இலங்கையில் தமிழர் எதிர்நோக்கும் பிரச்;சினைகளுக்கு தீர்வு காண இது ஒரு வழி என இதனை இந்திய வெளிவிவகார அமைச்சு வரவேற்றிருக்கிறது.

ஆனால், இலங்கை அரசானது பேச்சுக்களின் வழி மாகாண சபைகள்  இயங்குவதற்கு தேவையான அதிகாரங்களை வழங்குவதில் எள்ளவும் விட்டுக்கொடுக்கவில்லை.

30 ஆண்டுக hல உள்;நாட்டு யுத்;தத்தின் பின்னரும் பெரும்பான்மையை கொண்ட இலங்கை அரசு மத்தியில் இருந்து தமது அதிகாரங்களை வழங்க தாயாராக இல்லை.

எனவே இலங்கை அரசிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் வழி இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றிற்கு வழி செய்யும் படி இந்திய அரசை வினையமாக வேண்டுகிறோம்.

இல்லாவிடின் இப்பேச்சுக்கள் நீண்டுகொண்டு போவதோடு இலங்கை அரசானது புதிய வழிகளை தேடி அரசியல் பிரச்சினைக்கு தீர்வினை காணும் எண்ணத்தை பின் தள்ளிக்கொண்டே போகும்.

எனவே இந்திய அரசானது புவியியல் நோக்கங்களையும் தாண்டி உண்மையாக தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண உழைக்க வேண்டும். இந்த பேச்சுவார்த்தையில் இந்திய அரசு மத்தியஸ்தம் வகிப்பதை இலங்கை அரசு எதிர்க்க போவதில்லை.

இந்திய சமாதான உடன்படிக்கைக்கு முன்பு இந்திய அரசு இது போன்ற மத்தியஸ்த பணியை ஆற்றிய போதும் தமிழ் தலைவர்கள் இந்திய சமாதான ஒப்பந்தத்தின் தன்மைகளை உணராமலும் தமக்குள் கெட்டித்தனமாக ஒன்றிணைந்து செயல்ப்படாமலும் தூக்கி எறிந்துவிட்டனர்.

எனவே, இந்திய வெளிவிவகார அமைச்சானது இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாமல் எமது வேண்டுகோளை பரிசீலித்து எமது உதவிக்கு வரும்படி அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம்.

போரினால் தாக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்படுகின்ற மக்கள் மேல் தாங்கள் காட்டும் மனிதாபிமான கரிசனைக்;கு நன்றி தெரிவிக்கிறோம் என குறிப்பிடப்பட்டள்ளது.


You May Also Like

  Comments - 0

  • ummpa Thursday, 19 January 2012 02:14 PM

    இது எப்படி இருக்கு டக்ளஸ் உடன் இந்திய அமைச்சர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .