2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

யாழில் கிணறுகள் வற்றியதால் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 01 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்)

யாழ். குடாநாட்டில் வறட்சி காரணமாக தீவகம், காரைநகர், ஆகிய இடங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அப்பிரதேச குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

யாழ்.காரைநகர் தீவப் பிரதேசங்களில் வறட்சியினால் நீர் நிலைகள் வற்றியதால் குடி தண்ணீருக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்பிரதேசங்களில் உள்ள கிணறுகள் நீர் வற்றி வறண்ட நிலையில் காணப்படுகின்றன.

இதனால் அடிப்படைத் தேவைகளுக்கே தண்ணீரைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அப்பிரதேச மக்கள் மிகவும் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

யாழ்.காரைநகர் பிரதேசத்தில் பௌசர் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. இருந்தும் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யமுடியாத நிலை காணப்படுவதாக அம்மக்கள் குறிப்பிடுகின்றனர்.

தீவகம், காரைநகர் மட்டுமன்றி யாழ் குடாநாட்டின் சகல பிரதேசங்களிலும் கிணற்று நீர் வற்றிய நிலையில் காணப்படுகின்றது. வற்றிய நீரை மக்கள் பயன்படுத்துவதன் காரணமாக வாந்திபேதி, வயிற்றோட்டம் போன்ற நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்நிலையில் நல்லூர் பிரதேச சபை நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவில், திருநெல்வேலி, கொக்குவில், நல்லூர் போன்ற இடங்களில் இருந்து கிணற்று நீரைச் சேகரித்து வறட்சி காரணமாக கிணற்று நீரில் கிருமி தொற்று ஏற்பட்டுள்ளதா என அறிவதற்காக யாழ் மருத்துவ பீடத்தில் பரிசோதனைக்காக கொடுக்கப்பட்டுள்ளதாக நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X