2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இறந்த சிசுவை வைத்தியசாலையில் விட்டு தாய் தலைமறைவு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 04 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                    (ஜெ.டானியல்)
பிறந்து ஒருநாளான இறந்த சிசுவை யாழ்.போதனா வைத்தியசாலை மகப்பேற்று விடுதியில் விட்டு பெற்ற தாய் தலைமறைவாகியுள்ளதாக யாழ்.பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளனர்.

பிரசவத்திற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிசுவைப் பிரசவித்துவிட்டு, அதை இறந்த நிலையில் விட்டு விட்டு தலைமறைவாகியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த தாய் தான் கிளிநொச்சியைச் சேர்ந்தவர் என பொய்யான விலாசம் ஒன்றை யாழ்.போதனா வைத்தியசாலை மகப்பேற்று பதிவேட்டில் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இறந்த சிசுவின் சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X