2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

புலிக்கொடி விவகாரம்; இரு சந்தேகநபர்களின் முகவரிகளும் தவறானவை: எரிக் பெரேரா

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 15 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

யாழ். நெல்லியடிப் பகுதியில் புலிக்கொடி காட்டிய விவகாரம் தொடர்பாக அழைப்பானை விடுக்கப்பட்ட இரண்டு சந்தேக நபர்களின் முகவரிகளும் தவறானவை என்றும் அப்படி ஒரு விலாசத்தில் குறித்த இருவரும் வசிக்கவில்லை என்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை  தெரிவித்தார்.

நெல்லியடி பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது புலிக்கொடி ஏந்தியவாறு மோட்டார் சைக்கிளில் வலம் வந்த நபர்கள் இனங்காணப்பட்டு 12ஆம் திகதி நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

இந்த அழைப்பாணையின் பிரகாரம் குறித்த இரண்டு சந்தேக நபர்களின் முகவரிகளும் தவறானதாக உள்ளதால் மீண்டும் அழைப்பாணை விடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த மோட்டார் சைக்கிளுக்கு பயன்படுத்தப்பட்ட இலக்கத்தகட்டுக்குரிய முச்சக்கரவண்டியின் உரிமையாளருக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறித்த வழக்குக்கு சமூகமளிக்காத சந்தர்ப்பத்தில் இங்கிருந்து பொலிஸ் பிரிவு ஒன்றை அனுப்பி கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X