2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

லஞ்சம் பெற்ற சார்ஜன்ட் பதவி நீக்கம்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 24 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

விபத்து ஏற்படுத்திய நபர் ஒருவரிடம் இருந்து 10,000 ரூபா லஞ்சம் வாங்கிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
 
யாழ். பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸ் பிரிவைச் சேர்;ந்த சுனில் என்பவரே இவ்வாறு பதவீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விபத்தொன்றை ஏற்படுத்திய சந்தேகநபர் ஒருவரிடமிருந்து 10 ஆயிரம் ரூபா பணத்தினை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு அவரை குற்றத்திலிருந்து விடுவித்துள்ளார் என விசாரணைகள் மூலம் தெரியவந்ததை அடுத்தே மேற்படி பொலிஸ் உத்தியோகஸ்தர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று யாழ். போலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X