2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தில் இளைஞர் பலி

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 25 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மாதகல் பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை 7.20 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன்,  மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

சில்லாலை பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த அருளானந்தம் அன்ரனிராஜா (வயது 17) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடற்படையினரின் ஜீப் ரக வாகனமும்  சைக்கிளும் மோதியே விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்தவரும் காயமடைந்தவரும் சகோதரர்கள் என இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X