2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் இராணுவம், பொலிஸுடன் இணைந்துள்ளனர்: ரஜீவவிடம் முறைப்பாடு

Menaka Mookandi   / 2013 மார்ச் 14 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


'குற்றச்செயல்களில் ஈடுபவடுபவர்கள் இராணுவத்துடனும் பொலிஸாருடனும் சேர்ந்திருப்பதினால் குற்றச்செயல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் தெரிவிப்பதற்கு தயக்கமாக இருக்கிறது' என்று நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்கவிடம் யாழ்ப்பாண பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற முரண்பாடுகளைத் தீர்த்தல் என்னும் தொனிப்பொருளில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

எமது பிரதேசத்தில் நடைபெறும் குற்றச்செயல்கள் தொடர்பில் அதனோடு சம்மந்தப்பட்டவர்கள் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யும் போது அவர்களைக் பொலிஸார் முறைப்பாட்டின் பிரகாரம் கைது செய்கின்றார்கள்.

அவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் இரண்டு நாட்கள் கழித்து விடுதலையாகி மாலை நேரங்களில் இராணுவத்தினருடனும் பொலிஸாக்ருடனும் சேர்ந்திருப்பதால் குற்றச்செயல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்வதற்கு தயக்கமாக இருக்கின்றது என பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் அங்கு பிரசன்னமாகியிருந்த பொலிஸாரிடம் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இனிவரும் காலங்களில் அந்தந்த பிரதேசத்தில் உள்ள சிவில் பாதுகாப்பு குழுக்களிடம் முறைப்பாடுகளை இரகசியமான முறையில் பதிவு செய்யுமாறு பொதுமக்களிடம் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X