2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது நடவடிக்கை

Kogilavani   / 2013 மார்ச் 16 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரூபன்

யாழப்பாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு புறப்படும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் சுதந்திரத்தில் இடையூறு விளைவிப்பவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்து கருணாரட்ன தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'தாம் பயணம் செய்யும் பேருந்தினை தெரிவு செய்யும் சுதந்திரம் மக்களிடம் உண்டு.

யாழ்ப்பாணத்திலிருந்து குறிப்பாக கொழும்பு, கண்டி, திருகோணமலை, மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்கு இரவு நேரங்களில் செல்லும் தனியார் பேருந்துகள் யாழ்.பண்ணை பகுதியில் இருந்து புறப்படுகின்றன.

இப் பேருந்துகளில் பயணிக்க வரும் பொதுமக்களினை பேருந்து நடத்துனர்கள், இடைத்தரகர்கள் வலுக்கட்டாயமாக தமது பேருந்துகளில் பயணிக்க வைக்கின்றனர்.

இது தவறான விடயமாகும். இதனை தடுப்பதற்காக பொலிஸார் இச்சம்பவம் இடம்பெறும் இடங்களில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக மக்கள்  யாழ். பொலிஸாரிடம் தொடர்பு கொண்டால் இதற்கு தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X