2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சீன அரசு இலங்கைக்கு பாரிய உதவிகளை வழங்குகின்றது: வடமாகாண ஆளுநர்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 27 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


சீன அரசாங்கம் இலங்கைக்கு பாரிய உதவிகளை தொடர்ந்து வழங்கி வருவதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ். பொதுநூலகத்தின் உசாத்துணைப்பகுதியை யாழ். மாநகரசபையிடம், சீன தூதரக அதிகாரிகள் இன்று புதன்கிழமை கையளித்துள்ளனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டில் நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த நிலையில், இந்த அமைதியான சூழலில் நாட்டில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அமைதியான சூழலில் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும்  அபிவிருத்திப் பணிகளில் சீனாவின் பங்களிப்பும்  முக்கியமானதாக உள்ளது.

யுத்தத்திற்கு முன்னரான காலத்தில் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபம் போன்ற பல் அபிவிருத்திப் பணிகளுக்கு சீன அரசாங்கம் உதவி வழங்கியிருந்தது.  யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம், அதிவேக நெடுங்சாலை புனரமைப்பு, மத்தல விமான நிலைய கட்டமைப்பு, ஏ - 9 வீதி புனரமைப்பு, யாழ்;. பொதுநூலகத்திற்கு 20 மில்லியன் ரூபா செலவிலான புனரமைப்பு ஆகிய அபிவிருத்திப் பணிகளையும் சீன அரசாங்கம் வழங்கியுள்ளது.

அத்துடன் கலை, கலாசாரம், மதம் போன்ற துறைகளிலும்  சீனா இலங்கையுடன் நெருக்கமான உறவைப் பேணி வருகின்றது. இதற்காக சீன அரசாங்கத்திற்கு ஜனாதிபதி சார்பிலும் வடபகுதி மக்கள் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X